பிற எழுத்துகளின் பயன்பாடு ..! Use of other characters in tamil,

பிற எழுத்துகளின் பயன்பாடு ..!



Use of other characters in tamil,

★ கிரந்த எழுத்துகள் ..!

★ வட்டெழுத்துக்கள்..!

★ வட்டெழுத்துக்களின் மூலம்..!

★ சிந்துவெளி தமிழ் எழுத்து ...!

kalvettuiyal,

கிரந்த எழுத்துக்கள் :

டாக்டர் பீலர் என்பவர்

★ கிரந்த எழுத்துக்கள் (ஷ,ஜ,ஹ போன்றவை) வடமொழி சாசனங்களையும் தமிழ் மொழி சாசனங்களில் வரும் வட மொழிச் சொற்களையும் எழுதப் பயன்பட்டன. ஆனால் தமிழ் மொழியில் உள்ள சாசனங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களால் எழுதப்பட்டு வந்தன.


★  தமிழகத்தில் காணப்பட்ட பிராமி எழுத்துகளும் அசோகன் பொறித்த தென் கல்வெட்டு எழுத்துகளும் ஏறக்குறைய ஒத்துள்ளன. அவை தமிழ் எழுத்துக்களின் அமைப்பையே அடிப்படியாகக் கொண்டவை. அவற்றிள் க, ச, த, ப ஆகிய வல்லெழுத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன.


★  வடமொழியில் உள்ளதைப் போல அவற்றின் வருக்க எழுத்துக்கள் பெரும்பான்மை காணப்படவில்லை. இவற்றில் வட நாட்டுப் பிராமி கல்வெட்டுகளில் காணப்படாத சில எழுத்துக்களும் கிடைக்கின்றன.

வட்டெழுத்துக்கள்..!


தமிழ் வட்டெழுத்துக்கள், குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்

.


வட்டெழுத்துக்கள் முறை எப்பொழுது தோன்றியது என்பதை உறுதியாகக் கூற முடியாதாயினும், அஃது ஒரு காலத்தில் தமிழ்நாடு முழுமையும் பரவியிருத்தல் வேண்டும். வட்ட எழுத்துகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மிகவும் வளர்ச்சியுள்ள நிலையில் ஒரு தனி வடிவத்தைப் பெற்றிருந்ததெனக் கல்வெட்டுகள் கொண்டு கூறலாம்.


★  வட்டெழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலுமே பெரும்பாலும் வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம் தொகு  சோழ   நாட்டிலும்   தொண்டை நாட்டிலும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பொறிக்கப்பட்ட சாசனங்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன. 


★ 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் பாண்டி மண்டலம் சோழர் கைப்பட்டதும், அங்கும் வட்டெழுத்துகளில் சாசனங்கள் பொறிக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாடு முழுதும் இவ்வகை எழுத்துக்களே வழங்கி வருகின்றன. சிலவற்றில் இருவகை எழுத்துக்களும் கலந்து காணப்படுகின்றன. 


★ இதனால் தமிழைக் குறிக்கவே தமிழகம் முழுவதும் வட்டெழுத்து இருந்தது என்பதும், பின்னரே வட்டெழுத்து முறையும் தமிழ் எழுத்து முறையும் தனித் தனியே தமிழகத்தில் இருந்தன என்பதும் அறியப்படுகிறது. சேரநாட்டில் சோழர் ஆதிக்கத்தால் வட்டெழுத்து வழக்கு வீழ்ந்தபின், அதன் கிளையாகக் 'கோல் எழுத்துக்கள்' தோன்றின. அவை அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்துள்ளன.


வட்டெழுத்துக்களின் மூலம் ..!

டாக்டர் பீலர் என்பவர் "வட்டெழுத்துகள் பிராமி எழுத்துக்களினின்று வந்தவை; இவை தமிழ் எழுத்துக்களின் திரிபு" என்று கூறுகிறார்." வட்டெழுத்துக்கள் பிராமிக்கு மூலாதாரமான பினீஷிய எழுத்துகளினின்று தமிழரால் எடுத்து கொள்ளப்பட்டன " என்பார் டாக்டர் பர்நெல். இதனால் தமிழ் எழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன; வட்டெழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன என அறியலாம். பிராமி வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவியிருந்ததும் பண்டைகாலந்தொட்டே உரு, தன்மை, உணர்வு, ஒலி, கண் முதலிய எழுத்துக்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்ததே ' வட்டெழுத்து' என்பது பொருத்தமுடையது. 


★ தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பால் நாளடைவில் மாறுதல் அடைந்து சோழநாடு முழுவதும் கிரந்தத் தமிழாக விளங்கியது என்பது கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும்.


★ மேலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுதல் அரிது. கோலார், சேலம், வட ஆர்க்காடு முதலிய பகுதிகளில் கிடைத்த சில கல்வெட்டுகளில் தமிழ்-வட்டெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களும் காணப்படுகின்றன. 


★ இவை கி. பி. 900 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதனால் இருவகைத் தமிழ் எழுத்துக்களும் வேறு வேறு என அறியலாம். " தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே வட மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம்,பிராமி) தமிழகம் புக்கனர் " என பர்நெல் கூறுவது குறிப்பிடத்தக்கது.


சிந்துவெளி தமிழ் எழுத்து ...!


★ கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளித் திராவிட மக்கள் கொண்டிருந்த மொழியே தென் இந்தியத் தமிழரும் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதிலும் ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ் மொழி ஒரே வகையில் வளர்ச்சி அடைந்து வந்தது. சிந்துப் பிரதேசத்தில் காணப்பெற்ற சங்கேதக் குறிகளே நாளடைவில் 'விக்ரமக்கோல்' கல்வெட்டில் கண்ட வடிவம் பெற்றன. அவையே பின்னர் பிராமி எழுத்துக்களாக மாறின.


★  பிராமி எழுத்திலிருந்து வேறு மாறுதல்களுடன் வடமொழிக் குறிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிரந்தம், கிரந்தத் தமிழ் வளர்ச்சியடைந்தன என அறியலாம். சிந்து வெளியில் காணப்படும் சித்திர சங்கேத எழுத்துக்கள் தமிழ்நாட்டுப் பழைய நாணயங்களில் காணப்படுகின்றன.

தமிழ் நூல்கள் மட்டுமே எழுத்துக்களின் தோற்றங்களைப் பலவகையாக விளக்குகின்றன.



★ சித்திர சங்கேத எழுத்துக் களின்று தமிழகத்தில் எழுத்துக்கள் தனி முறையில் தோற்றமாகி வளர்ச்சி பெற்று, வட்டெழுத்துஎன்ற நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்துகள் மறைமலையடிகள், ஈ. வே. ராமசாமி போன்ற பல பெரியோர்களின் முயற்சிகளுடன் தற்போதுள்ள தோற்றம் பெற்று விளங்குகிறது எனலாம்.


Post a Comment

Previous Post Next Post