உணர்வெழுத்து, தன்மையெழுத்து, ஒலியெழுத்து, கண்ணெ ழுத்துக்களின் ஆகிய வற்றின் தாக்கம்..!
Impact of emotional writing, character writing, sound writing, eye drops ..!
உணர்வெழுத்து...!
உணர்வெழுத்து என்பவை சீனர்களின் பண்டைய எழுத்து முறையாகும்.
தன்மையெழுத்து ..!
தன்மை யெழுத்து எகிப்தியர் களிடம் கணப்பட்டதாகும்."அறிவு நுட்பத்திற்கு கண்ணும் எறும்பும், அறிவின்மைக்கு ஈயும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பும், வெற்றிக்குக் கருடனும் பிறவுமாம்....
ஒலியெழுத்து ..!
ஒலியெழுத்து என்பது ஒலிக்கு வடிவம் தந்து எழுதப்படுவது. இவ்வெழுத்துக்களுக்கே தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் இலக்கணம் கூறுகின்றன.
கண்ணெழுத்துக்கள்...!
கண்ணெழுத்துக்கள் என்பன சித்திர எழுத்துக்கள் ஆகும். சங்க காலத்தில் கண்ணுள் வினைஞர்- சித்திரக் காரிகள் எனப்பட்டனர். இதற்கு 'நோக்குனர் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். எழுதுதல் என்பதற்குச் சித்திரித்தல்' என்ற பழைய பொருளும் உண்டு.
சங்க காலத்தில் கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வழக்கில் இருந்ததாக சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் 'இறக்குமதி ' ஆன மூட்டைகட்கும் பண்டம் ஏற்றிய வண்டிகட்கும் கண்ணெழுத்துக்கள் இடப்பட்டிருந்தனவாம்.
1."வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயில்"
2."எய்யா வட வளத்து இரு பதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
என வரும் அடிகள் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடுகின்றன.
அரசாங்கத்தாருக்குத் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்பட்டனர்.
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மண்ணுடை முடங்கல் மன்னவர்க் களித்து" இவற்றால்
கண்ணெழுத்து என்பது சங்க காலத்தில் வழங்கிய ஒருவகை எழுத்தின் பெயர் என்பதும்
வெளிநாட்டு வணிகர் (வம்ப மாக்கள்) தம் பெயர் முதலியவற்றை இந்த எழுத்துக்களிலேயே பொறித்து வந்தனர் என்பதும்
இவ்வெழுத்துக்களிலேயே அக்கால அரசர் திருமுகம் முதலியன எழுதப்பட்டு வந்தன என்பதும் அறியலாகிறது.
★ இந்தக் கண்ணெழுத்து கருத்தை வெளிப்படுத்தும் எழுத்து என்பது இவற்றால் தெளிவாகிறது. தமிழில் எழுதத் தெரியாதவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்த எழுதி வைத்த எழுத்துக்கள் என்பதனை மேற்கண்ட பாடல் சான்றுகள் தெளிவாக்குகின்றன.
இவ்வெழுத்துக்கள் முற்காலத்தே தமிழில் வழங்கியவை என்பதை சாசன இலாகாவினின்றும் வெளிவந்த புத்தகத் தொகுதிகளை நோக்குமிடத்து அறியலாம்.
★ இவை சங்கேத எழுத்து அல்லது கரந்தெழுத்துக்கள் எனவும் வழங்கப்பட்டன. கந்தருவ தத்தை சீவகனுக்குக் கரந்தெழுத்தில் கடிதம் வரைந்ததாகத் தம் காலத்தில் வழங்கிய இக்குறியீடெழுத்துக்களைக் கொண்டு திருத்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார்.