தமிழ் எழுத்துகளின் தொன்மை.!
Antiquity of Tamil script in tamil..!
Kalvettuiyal,
Kalvettuiyal
★ இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், நான் மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப் பட்டவர் அல்லர் என்று கொள்ள க்கூடியதாம்." என்ற மு. இராகவையங்கார் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
★ இதன் மூலம் தமிழர் தம் எழுத்து நிலை நன்கு விளங்கும். மேலும் திரு பி.என். சுப்பிரமணியன் அவர்கள் "எழுத்துக்கள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்திய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள் தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை" எனக் கூறுகிறார். இதனால் தமிழ் எழுத்துகள் பெற்றிருந்த சிறப்பு நிலை வளர்ச்சியின் காரணமாகவே அவை இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அறியலாம்.