11-ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர கல்வெட்டு கண்டெடுப்பு | 11th Century Magical Inscription Discovered

11-ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர கல்வெட்டு கண்டெடுப்பு.!

11th Century Magical Inscription Discovered!

Kalvettuiyal,

கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர கல்வெட்டு கண்டெடுப்பு.!


★ 11-ம் நூற்றாண்டில் வடமொழிக்கென தமிழர்கள் உருவாக்கிய கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

◆ திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தில் மகாதேவர் நட்டுராமந்தர் என்ற மத்திய புரீஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. அங்குள்ள அம்மன் சன்னதி முன்பு, பாதி மண்ணில் புதைந்த நிலையில் இருந்த பெரிய கல்வெட்டு மீட்கப்பட்டது.

★ இதுகுறித்து திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சு.ரவிக்குமார் என்பவர் கூறியதாவது: மத்திய புரீஸ்வரர் கோயிலின் அம்மன் சன்னதி அருகே பாதி மண்ணில் புதைந்திருந்த பெரிய கல்வெட்டைமீட்டு, ஆய்வு செய்தோம். 

★ அதில் வடமொழிக்கெனத் தமிழர்கள் உருவாக்கிய ‘கிரந்த எழுத்து’ பொறிக்கப்பட்டு இருந்து.

★ இது, தமிழர்களுக்கே சொந்தமானது ஆகும்.

★ எழுத்து சுமார் 220 செ.மீ உயரமும், 50 செ.மீ அகலமும், 20 செ.மீ கணமும் கொண்ட பெரிய கல்லில் நான்குபக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 

★ முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளின் உயரம் 60 செ.மீ.

★ இந்த கிரந்த எழுத்துகளை வாசித்த இந்திய வரலாற்று பேராசிரியர் ஒய்.சுப்பராயலு, நான்கு பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற மந்திர சொற்களே திரும்பத் திரும்ப வருகின்றன என தெரிவித்தார். 

★ பொதுவாக இவ்வகை மந்திரக் கல்லைப் போற்றி வழிபட்டால் மக்களுக்கும், கால்நடை களுக்கும் ஏற்படும் நோயை குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. 

★ எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும்போது, இந்த கல்வெட்டு கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

★ அதே பகுதியில் உள்ள வீரநாராயண பெருமாள் கோயில் அருகே மண்ணில் புதைந்திருந்த கல்வெட்டை ஆய்வு செய்தபோது, அதில் மூன்று பக்கங்களிலும் தமிழ் எழுத்துகள் இருப்பதைக் காண முடிந்தது.

★  80 செ.மீ. உயரமும், 50 செ.மீ. அகலமும், 20 செ.மீ. கணமும் கொண்ட இந்த கல்வெட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் இருப்பதை அறிய முடிகிறது. இது, கி.பி. 16-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டாக இருக்கலாம். 

★ இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post