சம்புவராயர் பற்றிய கல்வெட்டு, மற்றும் இலக்கிய வரலாறு..!
Inscription about Sambuvarayar, and literary history in tamil..!
படைவீட்டை ஆண்ட சம்புவராயர் வரலாறு..!
★ சம்புவராயர் வரலாற்றை எழுதுவதற்கு ஆதாரங்களாகக் காணப் படுபவை பெரும்பாலும் கல்வெட்டுக்களேயாகும்.
★ அதற்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கத்தக்கவை அரிதில் எண்ணக்கூடிய ஒரு சில இலக்கியங்களே. இவ்விலக்கியங்களை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. தமிழ் இலக்கியங்கள்
2. வடமொழி இலக்கியங்கள்
என்பதாக.
★ பிற குல அரசர்களைப் பற்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் சம்புவராயர்களைப் பற்றித் தெரிவிக்கும் குறிப்புகளை மூன்றாம் இனமாகக் கொள்ளலாம்.
★ கல்வெட்டு ஆதாரங்களைப் பொறுத்த மட்டில், கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலிருந்து விரிவான. என்று கி.பி. 14-ஆம் உண்மையான உறுதியாக நம்பலாம்.
★ நூற்றாண்டு ஆதாரங்களை வரை வழங்குகின் றன பின்னர் இவைகள் தெரி விக்கும் குறிப்புகளை இலக்கியங்கள், பிற குல அரசர்களின் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் உறுதி செய்கின்றன.
★ சம்புவராயர்களைப் பற்றிய செய்திகளை வழங்கும் கல்வெட்டுக்கள் கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமானவை கண்டுபிடிக்கப்பட்டு படியெடுக்கப் பட்டுள்ளன.
★ சம்புவராய மன்னர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுக்களும், சம்புவராயர்களைக் குறிக்கும் பிற குல மன்னர் களின் கல்வெட்டுக்களும் இதில் அடங்கும்.
★ இக்கல்வெட்டுக்கள் சம்புவராயர்கள் பிற குல மன்னர்களுக்கு அடங்கி இருந்தமையையும். பின்னர் சுய ஆட்சி பெற்றதையும். தங்கள் சுய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், சமுதாய மாற்றம், பொருளாதார மாற்றம், கலைப் பணி ஆகிய வைகளையும் புலப்படுத்து கின்றன.
★ 3-ஆம் ஆட்சி சோழ மன்னன் விக்கிரம சோழனின் ஆண்டிலிருந்து (கி.பி. 1120) மூன்றாம் இராஜராஜன் ஆட்சிக் காலம் வரையிலும் சம்புவராயரைப் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்க பெற்று உள்ளன. ஆதாரங்கள் : நடன. காசிநாதன் இயக்குநர் தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.