தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்..!

Origin and development of Tamil characters in tamil .!

Kalvettuiyal,

Kalvettuiyal

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்..!

★ தமிழ் மொழி மிகப் பழமையானது. 

★ பழங்காலத்திலேயே தமிழர் தமிழை வளர்த்தனர். 

★ அவர்கள் தமிழ் நூல்களைச் சுவடிகளில் எழுதினார்கள்.

★ நூல்களை எழுதுவதற்கு எழுத்து வேண்டும்.

★ எழுத்துக்களையும் அமைத்து நூல் எழுதினார்கள். 

★ ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் நூல்கள் எழுதப்படுகின்றன. 

★ தமிழ் எழுத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறிமாறி வந்துள்ளன. 

★ எழுத்துக்களின் வரிவடிவம் மாறிக் கொண்டு இருந்தபடியால். பண்டைக்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்தின் வரிவடிவம் இன்னதென்று இப்போது தெரியவில்லை.

★  பண்டைக்காலத்துத் தமிழ் எழுத்து மறைந்து போயிற்று.

★ கி.மு.3ஆம் நூற்றாண்டில், அசோக மாமன்னர் பாரத நாட்டை அரசாண்ட காலத்தில், தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும், இலங்கையிலும் பௌத்த மதம் வந்து பரவிற்று.

★  அசோக மன்னரின் பாட்டனான சந்திர குப்த மௌரியன் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் வந்து பரவிற்று.

★ சமணமதம்  பௌத்தமதம் என்னும் இரண்டு மதங்களும் பரவுவதற்குக் காரணமாக துறவிகளே பௌத்த மதத்தோர்களும் இருந்தனர்.

★ அந்த மதங்களின் சமண சமய முனிவர்களும் ஊர்களிலும் நகரங்களிலும் போய்த் தங்கள் தங்களுடைய மதங்களைப் பரப்பினார்கள். 

★ அசோக மாமன்னன் பொறித்துள்ள கல்வெட்டுகளில் இரண்டு மாமன்னனாகிய அவர் தமிழகத்திலும் இலங்கையிலும் பௌத்த மத பிக்குகளை அனுப்பி தர்ம விஜயம் (அறவெற்றி) பெற்றதாகக் கூறுகின்றன.

★ அதாவது பௌத்த மதத்தைப் பரவச் செய்ததைக் கூறுகின்றன.

★  அசோக மாமன்னருடைய இரண்டாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும், பதின்மூன்றாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும் இந்தச் செய்திகளைக் கூறுகின்றன.

★  தென்னிந்தியாவிலும் தமிழகத்திலும் பௌத்த மதத்தைக் கொண்டு வந்து பரவச் செய்த பௌத்த பிக்குகள் பிராமி எழுத்தையும் கொண்டு வந்து பரவச் செய்தார்கள். 

★ அந்த காலத்திலேயே சமண சமயத்தைப் பரப்பி வந்த ஆருகத மதத்து முனிவர்களும் பிராமி எழுத்தையும் பரப்பினர்.

பிராமி எழுத்து :

★ மத நூல்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்த படியாலும், அந்த நூல்களில் எழுதப்பட்டிருந்த எழுத்து பிராமி எழுத்தாக இருந்த படியாலும் அவர்கள் மூலமாக பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்தது.

★  இவ்வாறு பௌத்த சமண சமயங்களோடு பிராமி எழுத்தும் தமிழ் நாட்டில் கால் ஊன்றியது.

★ இவ்வாறு கடைச்சங்க காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமி எழுத்து புகுந்தது. அக்காலத்தில் வடஇந்தியா முழுவதும் பிராமி எழுத்து வழங்கி வந்தது. அந்தப் பிராமி எழுத்தைத்தான் அவர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

★ அவர்கள் வருவதற்கு முன்னே தமிழகத்தில் தமிழர் ஒருவகையான தமிழ் எழுத்தை எழுதி வந்தனர். 

★ அந்தத் தமிழ் எழுத்து பிராமி எழுத்து வந்தவுடனே மறைந்து விடவில்லை. 

★ புதிதாக வந்த பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்குச் சில காலம் சென்றது. 

★ பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்கு ஒரு நூற்றாண் டாவது  சென்றிருக்க வேண்டும்.

★ பௌத்த சமண சமயங்களை வளர்த்த பௌத்த பிக்குகளும் சமண முனிவர்களும் தங்கியிருந்த இடங்களுக்குப் பள்ளி என்பது பெயர்.

★ அவர்கள் ஊர்ச் சிறுவர்களைத் தம்முடைய பள்ளிகளுக்கு அழைத்து அவர்களுக்குக் கல்வி கற்பித்தார்கள். 

★ பள்ளிகளில் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்தபடியால் பாடசாலைகளுக்குப் 'பள்ளிக்கூடம் என்று புதிய பெயர் ஏற்பட்டது. 

★ அப்பெயர் இன்றளவும் வழங்கி வருகிறது. 

★ பள்ளிக்கூடங்களில் அவர்கள் பழைய தமிழ் எழுத்தைக் கற்பித்தர்கள். 

★ மதநூல்களைப் பரப்புவதற்காகச் சிறுவர்களுக்குப் பிராமி எழுத்தையும் கற்பித்தார்கள்.

★  காலப் போக்கில் பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்து போய் புதிய பிராமி எழுத்து பரவத் தொடங்கியது. 

★ பழைய தமிழ் எழுத்து மறைந்து விடவே புதிய பிராமி எழுத்து நாட்டில் பயிலப்பட்டது. 

★ தமிழ் நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. 

★ பிராமி எழுத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தது.


வட்டெழுத்து;

★ அதன் பிறகு பிராமி எழுத்து வரிவடிவத்தில் மாறுதல் அடையத் தொடங்கி வட்டெழுத்தாக உருவடைந்தது.

★ பிராமி எழுத்து திரிபடைந்த   வட்டெழுத்து, பிராமி எழுத்துகள்,

Keywords :

கல்வெட்டியல்,

தமிழ் எழுத்துக்கள்,

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும்,

தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி,










Post a Comment

Previous Post Next Post