கல்வெட்டில் காலக்குறிப்புகள் | Inscription Timelines in tamil

கல்வெட்டில் காலக்குறிப்புகள்..!

Inscription Timelines in tamil..!

kalvettuiyal,



1. ஸ்வஸ்திஸ்ரீ: ஸார்வபௌமசக்ரவரத்திகள் போசளவீர ஸோமேஸ்வர் தேவர்க்கு யாண்டு 22ஆவது வ்ருச்சிக நாயற்று

2. அபர பக்ஷத்து ஷஷ்டியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்து நாள் . . . . .

என்று கல்வெட்டுகளில் இவ்விதமே காலக்குறிப்புகள் இடம்பெறும். அனைத்துக் குறிப்புகளும் பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு சிலக் கல்வெட்டுக்களிலேயே இடம்பெறுகின்றன.


காலக்கணிப்பு :

◆ வானிலையில் இயங்கும் கோள்களில் சூரியனையும், சந்திரனையும் மையமாக வைத்துக் காலங்கள் கணிக்கப்படுகின்றன. 

◆ சில இடங்களில் சூரியனையும் சில இடங்களில் சந்திரனையும் மையமாக்க் கொண்டு காலம் கணிக்கப்படுகின்றன. 

◆ சூரியன் ஓர் ராசியைக் கடக்க ஆகும் காலத்தைக்கொண்டு மாதம் கணிக்கப்படுகிறது. 

◆ சூரிய மாதமே தமிழ்நாடு , பெங்கால், பஞ்சாப், மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் பின்பற்றப்படுகின்றன. 

◆ சந்திரன் ஒரு ராசியைக் கடக்க ஆகும் நாட்களின் அடிப்படையில் “சந்திர மாதம்” என்பது 30 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

 சந்திர மாதத்திற்கே திதிகள் கணக்கிடப்பெறுகின்றன.


சந்திரனை மையமாகக்கொண்ட கணிப்பு :

◆ சந்திரன் ஒரு ராசியைக் கடக்க ஆகும் நாட்கள் 30 என்பதன் அடிப்படையில் சந்திர மாதம் கணக்கிடப்படுகிறது. 

◆ சந்திரனை மையமாகக்கொண்டு கணிக்கப்படும் காலக்கணிப்பில் திதிகள் முக்கியத்துவம் பெற்று கணிக்கப்பெறுகின்றன.

◆ சந்திரனை அடிப்படையாக் கொண்ட மாதம் 2 கால பகுதியாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கால பகுதிக்கும் 15 நாட்கள் என்ற விகிதத்தில் பகுக்கப்பட்டு ஒவ்வொரு 15 நாளும் முடிவில் முறையே அமாவாஸ்யை, பௌர்ணமி, என கணக்கிடப்படுகிறது. 

◆ ஒவ்வொரு 15 நாட்களும் 15 திதிகளாக வளர்பிறை, தேய்பிறை என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது

◆ இந்த 15 நாட்களும் மொத்தமாக வடமொழியில் பக்க்ஷம் அல்லது பக்கம் என்று அழைக்கப்படும்.

◆  அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை காலத்தைக் சுக்கிலபட்சம் என்றும், பௌர்ணமிக்குப் பின்பாக வரும் தேய்பிறை காலத்தைக் கிருஷ்ண பட்சம் ,அபர பட்சம், பஹூள பட்ஷம் என்று பலவாறாக அழைப்பர்.. 

◆ தமிழில் நாள் என்பதே சமஸ்கிருதத்தில் திதி என்றாகிறது. அதாவது சாத்திரமான அல்லது நன்மை தரக்கூடிய நாள் எனக் குறிப்பிடலாம்.

◆ வட இந்தியாவில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட மாதம் “பூர்ணிமாந்தா” என அழைக்கப்படுகிறது. 

◆ வட இந்தியாவில் பௌர்ணமியை முதன்மையாகக் கொண்டு பௌர்ணமியிலிருந்து மாதம் கணக்கிடப்படுவது. 

◆ அதே வேளையில் நர்மதா நதிக்கு தெற்கே இருக்ககூடிய பகுதிகளில் சந்திரனை அடிப்படையாக கொண்ட மாதம் “அமாந்தா” என்று அழைக்கப்படும். 

◆ சந்திரனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள் (Lunar months) 12 ஆவை: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி. 12 மாதங்களுக்கும் 354 நாள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது முறைப்படி 360 நாட்கள் வரவேண்டும்.

சூரியனை மையமாகக்கொண்ட கணிப்பு :

◆ சூரியன் ஒரு ராசியைக் கடக்க ஆகும் நாட்களை அடிப்படையாகக் கொண்டு காலம் கணிப்பது சூரிய மாதங்கள் (Solar months) என்று அழைக்கப்படுகிறது.

◆  மேற்கு வங்கம், பஞ்சாப், அதை ஒட்டிய மாநிலங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

◆  தென்னிந்தியாவில் கேரளா, தமிழகப் பகுதிகளில் இம்மாதக் கணக்குமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. 

◆ சூரியன் சஞ்சரிக்கும் ராசியை அடிப்படையாகக்கொண்டு அம்மாதம் கணக்கிடப்படுகிறது.

◆  ராசி மண்டலம் 12 வீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: 1.மேஷம் 2.ரிஷபம் 3.மிதுனம் 4.கடகம் 5.சிம்மம் 6.கன்னி 7.துலாம் 8. விருச்சிகம் 9.தனுசு 10.மகரம் 11.கும்பம் 12.மீனம். சூரியன் மேஷத்திலிருந்து மீனம் வரை செல்ல 12 மாதங்கள் ஆகும்.

◆  இது 365 நாட்களாக கணக்கிடப்படுகிறது. இக்கணிப்பு ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு மாதிரியாகக் கணிக்கப்படுகிறது.

◆  தமிழ் நாட்டில் சூரிய ஆண்டின் துவக்கமாகச் சித்திரை மாதமும், மேற்கு வங்கம், பஞ்சாப் பகுதிகளில் வைகாசி மாதமும் ஆண்டின் துவக்க மாதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

◆ சூரிய மாதத்திற்கு 29 முதல் 32 நாட்கள் வரை கூட கணக்கிடப் பெறுகிறது.


வாரம்: 

◆ வாரம் என்பது தமிழ் மொழியில் கிழமையைக் குறிக்கும்.


தமிழ்சமஸ்கிருதம்

◆ ஞாயிற்றுக் கிழமை- பானு வாரம் அல்லது ஆதிவாரம்

◆ திங்கள் கிழமை- சோமவாரம்

◆ செவ்வாய் கிழமை- மங்கள் வாரம்

◆ புதன் கிழமை- சௌம்யவாரம் அல்லது புத வாரம்

◆ வியாழ கிழமை- குரு வாரம் அல்லது பிருஹஸ்பதி வாரம்

◆ வெள்ளி கிழமை- சுக்கிர வாரம்

◆ சனி கிழமை- சனி வாரம்


நட்சத்திரம் :

◆ நட்சத்திரங்கள் என்பது வான்மண்டத்தில் தோன்றும் விண்மீன்கள் அல்லது வான்மீன் என்று பொருள் படும். சந்திரன் நாண்மீனில் தங்கிச்செல்லும் காலம் நட்சத்திரங்கள் 27. 

அவை

1 .அஸ்வினி,

2. பரணி,

3. கார்த்திகை,

4. ரோகிணி,

5. மிருகசிரீடம்,

6. திருவாதிரை,

7. புனர்பூசம்,

8. பூசம்,

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்தம்

14. சித்திரை

15 .சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22.திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26.உத்திரட்டாதி

27. ரேவதி


திதி :

◆ தமிழில் நாள் என்பதே சமஸ்கிருதத்தில் திதி என்றாகிறது. 

◆ அதாவது சாத்திரமான அல்லது நன்மை தரக்கூடிய நாள் எனக் குறிப்பிடலாம். 

◆ சந்திரன் ஒரு ராசியைக் கடக்க ஆகும் நாட்கள் 30 என்பதன் அடிப்படையில் சந்திர மாதம் கணக்கிடப்படுகிறது.

◆  சந்திரனை மையமாகக்கொண்டு கணிக்கப்படும் காலகணிப்பில் திதிகள் முக்கியத்துவம் பெற்று கணிக்கப்பெறுகின்றன.

◆  வளர்பிறையில் 14 திதிகளும் பிறகு பௌர்ணமியும், தேய்பிறையில் 14 திதிகளும் பின்பு அமாவாசையும் வரும்.

◆ இந்த 15 நாட்களும் மொத்தமாக பட்ஷம் அல்லது பக்கம் என்று அழைக்கப்படும்.

◆  அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை காலத்தைச் சுக்கிலபட்சம் என்றும், பௌர்ணமிக்குப் பின்பாக வரும் தேய்பிறை காலத்தைக் கிருஷ்ண பட்சம் ,அபர பட்சம், பஹூள பட்ஷம் என்று பலவாறாக அழைப்பர்.


திதிகள் :

1. பிரதமை

2. த்விதியை

3. த்ருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி

6. சஷ்டி

7. சப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. த்ரையோதசி

14. சதுர்த்தசி

15. அமாவாஸ்யை / பௌர்ணமி அல்லது பூர்ணிமா.


யோகம் :

யோகம் என்பதற்குச் "சந்திப்பு" அல்லது "இணைவு" (conjunction) என்று பொருள். வானியலில் சந்திர சூரியனது இயக்கங்களின் இணைவு எனச் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. கிரகங்களின் நற்சேர்க்கை “யோகம்” எனப்படுகிறது. யோகம் 27 வகைப்படும்.


அவை:

1. விட்கம்பம்

2. பிரித்தி

3. ஆயுஷ்மத்

4. சௌபாக்ய

5. ஷோபனம்

6. திகண்டம்

7. சுகர்மன்

8. த்ருதி

9. சூலம்

10. கண்டம்

11. விருத்தி

12. துருவம்

13. வியாகாதம்

14. அரிசனம்

15. வஜ்ரம்

16. சித்தி

17.வியாதிபாதம்

18. வரியான்

19. பரிகம்

20. சிவம்

21. சித்தம்

22. சாத்தியம்

23. சுபம்

24. சுப்பிரம்

25. பிராமியம்

26. ஐந்த்ரம் / மாகேந்திரம்

27. வைத்ருதி

◆ தற்போதைய ஜோதிட இயலில் ஒரு சில வகையான யோகங்களே அதிகமாகப் பின்பற்றப்படுகின்றன. 

◆ அவை 1. அமிர்த யோகம் 2. சித்த யோகம் 3. அமிர்த சித்த யோகம் 4. மரணயோகம் 5. சுப யோகம். 6. உத்பாத யோகம் 7. பிரபலாரிஷ்டம்


கர்ணம் :

கர்ணம் என்பது சந்திரனை மையமாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. இது திதியில் பாதி காலத்தைக் குறிப்பதாகச் சில இடைக்காலக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெறுகிறது. பிற்காலத்தில் கிராம அலுவலர்க்குக் கரணம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

கர்ணங்கள் 11 வகைப்படும் அவை:

1. பவம்

2. பாலவம்

3. கௌலவம்

4. தைதிலம்

5. கரசை

6. வனிசை

6. பத்திரை

7. விஷ்டி

8. சகுனி

9. சதுஸ்பாதம்

10. கிமித்துகணம்

11. நாகவம்


அயனம்:

அயனம் என்பது சூரிய கதியைக் குறிப்பது. அயனங்கள் இரு வகைப்படும். 1. உத்திராயனம் 2. தட்சிணாயனம். 3. பூரணாயனம்


உத்திராயனம் :

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, இம்மாதங்களில் சூரியன் வடக்கு நோக்கி வலம் வருவார். இதற்கு மேஷவீதி என்றும் பெயர். தேவருக்குரியது.


தக்ஷிணாயனம் :

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, இம்மாதங்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வலம் வருவார். அசுரருக்குரியது.


தமிழ் வருடங்கள் :

1. பிரபவ

2. விபவ

3. சுக்கில

4. பிரமோதூத

5. பிரசோற்பத்தி

6. ஆங்கிரச

7. ஸ்ரீமுக

8. பவ

9. யுவ

10. தாது

11. ஈஷ்வர

12. வெகுதானிய

13. பிரமாதி

14. விக்கிரம

15. விஷு

16. சித்திரபானு

17. சுபானு

18. தாரண

19. பார்த்திவ

20. வியய

21. சர்வசித்து

22. சர்வதாரி

23. விரோதி

24. விக்கிருதி

25. கர

26. நந்தன

27. விசய

28. சய

29. மன்மத

30. துன்முகி

31. ஏவிளம்பி

32. விளம்பி

33. விகாரி

34. சார்வரி

35. பிலவ

36. சுபகிருது

37. சோபகிருது

38. குரோதி

39. விசுவாவசு

40. பராபவ

41. பிலவங்க

42. கீலக

43. சௌமிய

44. சாதாரண

45. விரோதிகிருது

46. பரீதாபி

47. பிரமாதீச

48. ஆனந்த

49. இராட்சச

50. நள

51. பிங்கள

52. காளயுக்தி

53. சித்தார்த்தி

54. இரௌத்ரி

55. துன்மதி

56. துந்துபி

57. ருத்ரோத்காரி

58. இரத்தாட்சி

59. குரோதன

60. அட்சய


ருது – பருவக்காலம் :


வசந்த ருது- இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி)

கிரீஷ்ம ரிது- முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி)

வ்ருஷ ரிது-மழைக்காலம் (ஆவணி, புரட்டாசி)

சரத் ரிது- கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை )

ஹேமந்த ரிது- பனிக்காலம் (மார்கழி, தை)

சிசிர ரிது- பின் பனிக்காலம் (மாசி, பங்குனி)


Post a Comment

Previous Post Next Post