தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்..! Origin and development of Tamil characters ..!

தமிழ்  எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்..!

Origin and development of Tamil characters ..!


Kalvettuiyal


தமிழ் மொழி மிகப் பழமை யானது. பழங்காலத்திலேயே தமிழர் தமிழை வளர்த்தனர். அவர்கள் தமிழ் நூல்களைச் சுவடிகளில் எழுதினார்கள். நூல்களை எழுதுவதற்கு எழுத்து வேண்டும். எழுத்துக்களையும் அமைத்து நூல் எழுதினார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் நூல்கள் எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறிமாறி வந்துள்ளன. எழுத்துக்களின் வரிவடிவம் மாறிக் கொண்டு இருந்தபடியால், பண்டைக்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்தின் வரிவடிவம் இன்னதென்று இப்போது தெரியவில்லை. பண்டைக்காலத்துத் தமிழ் எழுத்து மறைந்து போயிற்று.


கி.மு. 3ஆம் நூற்றாண்டில், அசோக மாமன்னர் பாரத நாட்டை அரசாண்ட காலத்தில், தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும், இலங்கையிலும் பௌத்த மதம் வந்து பரவிற்று. அசோக மன்னரின் பாட்டனான சந்திர குப்த மௌரியன் ஆட்சிக் காலத்தில் சமண தமிழகத்திலும் வந்து பரவிற்று. சமணம் சமயம் தென்னிந்தியாவிலும், பௌத்தம் என்னும் இரண்டு மதங்களும் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் அந்த மதங்களின் துறவிகளே பௌத்த மதத்தோர்களும், சமண சமய முனிவர்களும் ஊர்களிலும் நகரங்களிலும் போய்த் தங்கள் தங்களுடைய மதங்களைப் பரப்பினார்கள். அசோக மாமன்னன் பொறித்துள்ள கல்வெட்டுகளில் இரண்டு மாமன்னனாகிய அவர் தமிழகத்திலும் இலங்கையிலும் பௌத்த மத பிக்குகளை அனுப்பி தர்ம விஜயம் (அறவெற்றி) பெற்றதாகக் கூறுகின்றன. அதாவது பௌத்த மதத்தைப் பரவச் செய்ததைக் கூறுகின்றன. அசோக மாமன்னருடைய இரண்டாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும், பதின்மூன்றாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும் இந்தச் செய்திகளைக் கூறுகின்றன. தென்னிந்தியாவிலும் தமிழகத்திலும் பௌத்த மதத்தைக் கொண்டு வந்து பரவச் செய்த பௌத்த பிக்குகள் பிராமி எழுத்தையும் கொண்டு வந்து பரவச் செய்தார்கள். அந்த காலத்திலேயே சமண சமயத்தைப் பரப்பி வந்த ஆருகத மதத்து முனிவர்களும் பிராமி எழுத்தையும் பரப்பினர்.


Post a Comment

Previous Post Next Post