பிராமி எழுத்து
(Brahmi writing)
Praami Ezhuththu..!
(கிமு 3 -கிபி 3 வரை) :
பிராமி எழுத்தின் வரலாறு..!
◆ மத நூல்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டி ருந்த படியாலும், அந்த நூல்களில் எழுதப்பட்டிருந்த எழுத்து பிராமி எழுத்தாக இருந்த படியாலும் அவர்கள் மூலமாக பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்தது.
◆ இவ்வாறு பௌத்த சமண சமயங்களோடு பிராமி எழுத்தும் தமிழ் நாட்டில் கால் ஊன்றியது.
◆ இவ்வாறு கடைச்சங்க காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமி எழுத்து புகுந்தது.
◆ அக்காலத்தில் வடஇந்தியா முழுவதும் பிராமி எழுத்து வழங்கி வந்தது. அந்தப் பிராமி எழுத்தைத்தான் அவர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
◆ அவர்கள் வருவதற்கு முன்னே தமிழகத்தில் தமிழர் ஒருவகையான தமிழ் எழுத்தை எழுதி வந்தனர். அந்தத் தமிழ் எழுத்து பிராமி எழுத்து வந்தவுடனே மறைந்து விடவில்லை.
◆ புதிதாக வந்த பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்குச் சில காலம் சென்றது. பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்கு ஒரு நூற்றாண்டாவது சென்றிருக்க வேண்டும்.
◆ பௌத்த சமண சமயங்களை வளர்த்த பௌத்த பிக்குகளும் சமண முனிவர்களும் தங்கியிருந்த இடங்களுக்குப் பள்ளி என்பது பெயர் .
◆ அவர்கள் ஊர்ச் சிறுவர்களைத் தம்முடைய பள்ளிகளுக்கு அழைத்து அவர்களுக்குக் கல்வி கற்பித்தார்கள்.
◆ பள்ளிகளில் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்தபடியால் பாடசாலைகளுக்குப் 'பள்ளிக்கூடம்' என்று புதிய பெயர் ஏற்பட்டது.
◆ அப்பெயர் இன்றளவும் வழங்கி வருகிறது. பள்ளிக்கூடங்களில் அவர்கள் பழைய தமிழ் எழுத்தைக் கற்பித்தர்கள். மதநூல்களைப் பரப்புவதற்காகச் சிறுவர்களுக்குப் பிராமி எழுத்தையும் கற்பித்தார்கள்.
◆ காலப் போக்கில் பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்து போய் புதிய பிராமி எழுத்து பரவத் தொடங்கியது.
◆ பழைய தமிழ் எழுத்து மறைந்து விடவே புதிய பிராமி எழுத்து நாட்டில் பயிலப்பட்டது. தமிழ் நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன.
◆ பிராமி எழுத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தது.