ஆதுர சாலை (Support Road )
Kalvettuiyal,
சோழர்களுடைய கல்வெட்டுக்களில் அவர்களுடைய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஆதுர சாலை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
பொருள் :
‘ஆதுலன்‘ என்ற சொல் நோயாளி, வறியோன், யாசகன் ஆகியோரைக் குறிக்கும். ஆதுர சாலைகளில் மருத்துவர்கள் இருந்தனர். அவர்கள் நோயுற்றவர்களுக்கு மருத்துவம் செய்தார்கள்.
அறக்கொடை :
மருத்துவர்களுக்கும், ஆதுர சாலைகளுக்கும் நிலமானது அறக்கொடையாகத்தரப்பட்டது. ‘மருத்துவக்குடி‘, ‘மருத்துவப்பேறு‘, ‘வைத்திய பாகம்‘ ‘மருத்துவப்பாடி‘, ‘விஷஹர போகம்‘ என்பன கல்வெட்டுக்களில் வந்துள்ளன. சான்றாக, “வைத்திய பாகம்‘ ஒன்றும், நிலமும், வைத்திய போகமும்“ என்பதைக் கொள்ளலாம். எனவே, ஆதுர சாலைகள் நடத்துவதற்கும், ஊதியமாகவும், நிலமானது வழங்கப்பட்டதை அறியலாம்.
உதய மார்த்தாண்ட பிரமராயன்:
உதய மார்த்தாண்ட பிரமராயன் சிறப்புகளில் ஒன்றாக இவர் ஆதுர சாலையை ஏற்படுத்தியவர் என்பதாகும்.