அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள்..!
Most of Ashoka's Gujarat inscriptions in tamil..!
அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள்:
★ அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள், இதன் காலம் கிமு 250 ஆண்டுகள் ஆகும்.
★ பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் நிறுவிய 3 பெரும் பாறைக் கல்வெட்டுகளில் இரண்டாகும். இப்பெரும் பாறைக் கல்வெட்டுகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்தில் ஒன்றும்.
★ அதன் அருகே அமைந்த கிர்நார் மலையை நோக்கிச் செல்லும் சாலையில் ஒன்றும் அமைந்துள்ளது. கிர்நார் மற்றும் ஜூனாகத் பாறைக் கல்வெட்டுகளில் அசோகரின் மக்களுக்கான அறவுரைகள் பாளி மொழியில் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
★ அசோகரின் மூன்றாவது பெரும் பாறைக் கல்வெட்டு, பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மார்தன் மாவட்டத்தில் சபாஷ் கார்கி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு கரோஷ்டி எழுத்துமுறையில் எழுதப்ட்டுள்ளது.
படம் : அசோகரின் கிர்நார் பெரும்பாறைக் கல்வெட்டு, தேசிய அருங்காட்சியகம், புது டில்லி
அசோகரின் ஜூனாகத் பெரும்பாறைக் கல்வெட்டு
அசோகரின் ஜூனாகத் பெரும்பாறைக் கல்வெட்டு
கல்வெட்டின் கருத்துகள் :
அசோகர், இக்கல்வெட்டிலும் தான் கௌதம புத்தர் எனும் தேவனுக்குப் பிரியமானவன் எனக்குறித்துள்ளார். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் சாதவாகனர் பேரரசுகளுக்கு இரு வகை அறங்கள் போதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும், பசுக்கள் நீர் அருந்த குளம் போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.